|
15.01.1953-14.03.1957 |
செல்வி.மனோன்மணி(ஆசிரியர்) |
|
மனோண்மணி என்பவரை ஆசிரியராகக்கொண்டு 15.01.1953 ஆம் ஆண்டு 10-15 மாணவர்களோடு ஓலைக்குடிசையில் ஆரம்பமானது. |
|
15.03.1957-28.08.1987 |
திரு.டேவிட் ஆபிரகாம் |
|
1957 ஆம் ஆண்டு மண்டூரைச்சேர்ந்த டேவிட் - ஆபிரகாம் என்பவரை அதிபராகக்கொண்டு மட்/பட்/13ஆம் கொலணி அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை என்றபெயரில் 01ஆம் வகுப்புத்தொடக்கம் 5ஆம் வகுப்பு வரை 30 மாணவர்களைக்கொண்டு ஆரம்பிக்கப்பட்டது |
|
01.04.1987-25.07.1991 |
திரு.ஜீவா ஜீவரெத்தினம் |
|
டேவிட் - ஆபிரகாம் என்பவரைத்தொடர்ந்த ஜீவா ஜீவரெட்ணம் என்பவரை அதிபராகக் கொண்டு பாடசாலைச்செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன. |
|
09.01.1992-06.05.1996 |
திரு.வினாயகமூர்த்தி |
|
அதிபராக கடமையேற்ற வினாயகமூர்த்தி அவர்களினதும் கிராம மக்களினதும் முயற்சியினால் 1992 ஆம் ஆண்டு தரம் 6-9 வரையான வகுப்புக்கள் வைப்பதற்கு அனுமதி பெறப்பட்டு 2ஆம் தரப்பாடசாலையாக தரம் உயர்த்தப்பட்டது. |
|
06.05.1996-04.09.2005 |
திரு.சோ.வசந்தகுமார் |
|
அதிபராக கடமையேற்ற திரு.சோ.வசந்தகுமார் அவர்களின் காலப்பகுதியில் 2003 ஆம் ஆண்டு தரம் 10-11இக்கான அனுமதிபெறப்பட்டு மாணவர்கள் கற்றலில் ஈடுபட்டு 2004 ஆம் ஆண்டு முதன்முதலாக க.பொ.த சா.தரப்பரீட்சைக்கு தோற்றி சிறப்பான பெறுபேறுகளை பெற்றுக்கொடுத்தனர். |
|
09.01.2006-02.11.2006 |
திரு.செ.திவ்வியராஜ் |
|
2006 ஆம் ஆண்டில் இருந்து இப்பாடசாலையின் அதிபர் பதவியை ஏற்றுக்கொண்ட திரு.செ.திவ்வியராஜ் அவர்களின் காலத்தில் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டன. |
|
29.01.2007-19.01.2016 |
திரு.செ.நேசராசா |
|
28.01.2007 ஆம் திகதியிலிருந்து அதிபராக கடமையேற்றுக் கொண்ட திரு.செ.நேசராசா அவர்களின் காலத்தில் கற்றல் கற்பித்தல் இணைப்பாட விதானச்செயற்பாடுகள் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டு வந்தது. இக்காலப்பகுதியில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 70 புள்ளிகளுக்கு மேல் தொடர்ச்சியாக மாணவர்கள் பெற்றுச்சித்தியடைந்து வந்தனர்.அதேபோன்று க.பொ.த.சா.தரப்பரீட்சையில் 2012 இல் 55வீதமான மாணவர்கள் சித்திபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும். |
|
16.03.2016-21.01.2017 |
திரு.சிவநேசராசா |
|
திரு.சிவநேசராசா அவர்களின் காலத்தில் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டன. |






